Vaibhavam of Sri Koorathazhvan
Sri:
Srimathe Gopaladesika Mahadesikaya Nama:
Srimathe Raghuveera Mahadesikaya Nama:
Adiyen. With the divine grace of Acharyan, PoorvAchAryAL, Acharya PadukaigaL, Swami Desikan and Divya Dhampathi, Veda Dharma Samrakshana Sabha (VDSS) is happy to share the following small write-up on the vaibhavam ofSri KoorathAzhvAn.
Adiyen’s heartfelt thanks to the bhagavata who originally blessed this vaibhavam. English translation is by Smt. Jayashree Vaidyanathan. Adiyen's heartfelt thanks to her for this kainkarya help.
Praying Acharyan and Sri Lakshmi Nrusimhan to bless her with more Kainkarya Sri.
ஸ்ரீ கூரேசாய நம:
1. குலத்தினால் ஏற்படும் பெருமை, கல்வியினால் ஏற்படும் கர்வம், செல்வத்தினால் ஏற்படும் ஏற்றம் ஆகிய “வஞ்ச முக்குறும்பை“ முற்றும் தவிர்ந்த பெருந்தகையாளர் கூரத்தாழ்வான்.
2. பாம்பின் வாய் அகப்பட்ட தவளையின் குரல் கேட்டு மூர்ச்சித்த ஆழ்வான், பிறர் துன்பம் கண்டு இரக்கம் கொள்வதே ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம் என்பதை நடைமுறையில் கொண்டவர்.
3. ஶ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றைய தேவதைகளை ஏன் நீர் வணங்குவதில்லை என்று வினவியதற்கு, 'எங்கள் பூர்வர்கள் செய்து போந்திலர்' என்று மறுமொழி அளித்தவரே, அத்தகைய எண்ணத்தை எமக்குத்தாரும்.
4. உம்மைக் கண்டால் தாமஸ குணம் படைத்தவரும் ஸத்வகுணம் படைத்தவராக மாறினர். எம்மையும் அவ்வாறு ஸத்வகுணம் கொண்டவர்களாய் விளங்கும்படி மாற்றிட வேண்டுகிறோம்.
5. ஶ்ரீவைஷ்ணவப்பயிர் அழியாமல் இருக்கும் பொருட்டு உம் இரு கண்களையும் இழந்து அன்று காப்பாற்றினீரே, அந்தத் த்யாகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது ஆற்றிட உம் அருளை வேண்டி நிற்கிறோம்.
6. தமக்குத்துன்பம் விளையக் காரணமாயிருந்த நாலூரானுக்கும் நற்கதி வேண்டி நின்ற ஆழ்வானே உம்மைப்போல் உயர்ந்தவர் உண்டோ?.
7. ஆசார்யனிடம் ஒரு சிஷ்யன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய ஆழ்வானே உம் திருவடிகளைப் பணிந்து நிற்கிறோம்.
8. எம்பெருமானாலே வரும் அது ஒழிய தாம் ஒன்றை ஆசைப்படுகையும் பழி என்றிருக்கும் கூரத்தாழ்வானே நீரே எம்மைக் காப்பாற்றி அருள வேண்டும்.
9. சாதிச்சண்டாளனுக்கும் ஒரு காலத்தில் ஶ்ரீ வைஷ்ணவன் ஆகைக்கு அதிகாரம் உண்டு. அந்தணன் பாகவத அபசாரமாகிற மஹாபாவத்தை பண்ணினால் அவனே கர்ம சண்டாளன் என்று அறுதியிட்ட கூரத்தாழ்வானே உம்முடைய தெளிவு எமக்கு ஏற்பட அருள் புரிந்திடுவீர்.
ஶ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்.