எதிராசன் வாசகத்தோர் எழில் சரிதம்
Sri:
Srimathe Gopaladesika Mahadesikaya Nama:
Srimathe Raghuveera Mahadesikaya Nama:
ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகாய நம:
வாழி அருளாளர் வாழி அணி அத்திகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதி எனும் சார்வு உடன் மற்று ஒன்றை
அரண் ஆகக் கொள்ளாதார் அன்பு.
என்று அருளினார் நம் இராமானுச முனி இன்னுரை சேரும் தூப்புல் புனிதர். அதாவது, ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளின் மூலமாக ஸ்ரீபாஷ்யகாரருக்கு ஆறு வார்த்தைகள் அருளி, "ப்ரவக்தா சந்தஸாம் வக்தா" என்கிறபடியே தர்சன ப்ரவர்த்தகம் செய்தருளின பேரருளாளனை மங்களாசாஸனம் செய்து, பிணி ஒழித்து அமரர் பெருவிசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற ஹஸ்திகிரியையும் மங்களாசாஸனம் செய்து, ஸ்ரீபாஷ்யகாரரின் ஐந்து அஜ்ஞைகளில் முதலாவதான ஸ்ரீபாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல் என்கிற ப்ரதானமான கைங்கர்யத்தையே தம் உயிர் மூச்செனக் கொண்டு ஸ்வாமி தேசிகன் அருளினபடிக்கு ஸ்ரீபாஷ்யகாரரின் ஸூக்திகளை ஸேவித்தும் ப்ரவசனம் செய்துமே தங்கள் வாழ்நாள்கள் முழுவதையும் கழித்து தர்சனத்தைத் தழைக்கச் செய்த நம், "எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்" என்கிறபடியும், "மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம்" என்கிறபடியும் நம் தூப்புல் மால் அருளின நம் தேசிக தர்சனத்து ஆசார்யர்கள்.
ஸ்ரீபாஷ்யத்துக்கு முதல் முதலாக வ்யாக்யானம் அருளிற்றும் நம் நடாதூர் அம்மாளும் ச்ருதப்ரகாசிகாசார்யருமே. அந்த ச்ருதப்ரகாசிகையை, வ்யவஹரிக்க ஒண்ணாத பரிச்ரமத்தோடே ரக்ஷித்தும் பரிசோதித்தும் ப்ரவர்த்தகம் செய்தும் அருளி, "ச்ருதப்ரகாசிகா பூமௌ யேந ஆதௌ பரிரக்ஷிதா" என்று கொண்டாடும்படியான கீர்த்தியுடையரும் நம் ஸ்வாமி தேசிகனே.
அதோடன்றி ஸ்ரீபாஷ்ய வ்யாக்யானங்களாக, 'அதிகரண ஸாராவளி' 'தத்வ டீகை' முதலிய உத் க்ரந்தங்களும் அருளி, எதிராசன் வாசகத்தை எண்டிசையும் பரப்பியருளிற்றும் நம் ஸ்வாமியே.
ஸ்வாமி தேசிகனுக்குப் பின்னும் நம் தேசிகர்கள் ஸ்ரீபாஷ்ய ப்ரவசனங்களாலே, "எதிராசன் வாசகத்தோர்" என்று கொண்டாடும்படியான அத்விதீயமான ஏற்றத்தை உடையவர்கள்.
"மாறன் மறையும் இராமானுசன் பாஷ்யமும் தேறும்படி உரைக்கும் சீர்" என்ற சிறப்பும் ஸ்வாமி தேசிகனுக்கே உள்ளதொன்றாகும்.
இத்யாதி உன்னதிகளை உடைய நம் தர்சன விஜயத்வஜங்களான ஆசார்ய ச்ரேஷ்டர்களின் வைபவங்களை, "எதிராசன் வாசகத்தோர் எழில் சரிதம்" என்ற பெயரிலே தொடர்ந்து அவர்களின் அவதார திருநாள்களில் தேசிகனடியார்களுக்கு விருந்தாக ஸமர்ப்பித்து அவ்வைபவங்களை ஸேவிப்பதால் ஸேவிப்போரை தன்யர்களாக்கும் அடியோங்களின் இந்த முயற்சி ஸபலமாக வேணுமாய் எதிராசன் வாசகத்தோர் எழில் அடிகளில் ப்ரார்த்தித்தபடி.
With the divine grace of Acharyan, PoorvAchAryAL, Acharya PadukaiGaL, Swami Desikan and Divya Dhampathi, Veda Dharma Samrakshana Sabha has recently started a new series of articles titled “எதிராசன் வாசகத்தோர் எழில் சரிதம்”. Our heartfelt thanks and humble prostrations to all these Sri Vaishnava Acharyas. All these articles are in Tamil.
Thiruvallur Sri. Raghava Nrusimhan Swamin has put together these articles from various sources into nice E-books with a lot of difficulty, devotion and dedication. We offer our humble, heartfelt thanks to Swamin for this invaluable help.
Veda Dharma Samrakshana Sabha Inc has published the following articles so far in this series.
Bhagavatas can access these E-books from the following folder. Our sincere request to bhagavatas to read these treasures and benefit.
“எதிராசன் வாசகத்தோர் எழில் சரிதம்” - Articles folder:
https://www.mediafire.com/folder/61206dmxws8d4/Ethirasan-vAsagaththOr-Ezhil-Charitham